games

img

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்த அஸ்வின்  

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் அஸ்வின் 5ஆவது சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.  

நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. இந்த ஆட்டத்தில் 3 விக்கெட் எடுத்ததன் மூலம் தமிழக சுழற்பந்து வீரர் ஆர்.அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் 150 விக்கெட்டை தொட்டு சாதனை புரிந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஐந்தாவது சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் மொத்தம் 8 பவுலர்கள் 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ 181 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்களில் முதலிடத்தில் உள்ளார். 150 விக்கெட்டுகள் கைப்பற்றிய பவுலர்கள் வரிசையில் கொல்கத்தாவின் சுனில் நரைன் விரைவில் இணைய வாய்ப்புள்ளது. தற்போது அவர் 149 விக்கெட்டுகளை ஐபிஎல் அரங்கில் கைப்பற்றியுள்ளார்.  

ஐபிஎல்லில் 150 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த வீரர்களின் பட்டியல்:  

பிராவோ 159 போட்டிகளில் 181 விக்கெட்டுகள், மலிங்கா 122 போட்டிகளில் 170 விக்கெட்டுகள், அமித் மிஸ்ரா 154 போட்டிகளில் 166 விக்கெட்டுகள், யசுவேந்திர சாஹல் 122 போட்டிகளில் 157 விக்கெட்டுகள், பியூஸ் சாவ்லா 165 போட்டிகளில் 157 விக்கெட்டுகள், ஆர். அஸ்வின் 175 போட்டிகளில் 152 விக்கெட்டுகள், புவனேஷ்குமார் 139 போட்டிகளில் 151 விக்கெட்டுகள், ஹர்பஜன்சிங் 163 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். 

;